பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரம்யா ஜோ-வியானா…

பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரம்யா ஜோ-வியானா ஆகியோர் மொத்தமாக வாங்கிய சம்பளம்… எத்தனை லட்சம் தெரியுமா?

விஜய் என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு டாப்பான ஒரு தொலைக்காட்சி.

இதில் இப்போது 100 நாட்களுக்கு என்டர்டெயின்மென்ட் கொடுக்கும் வகையில் அமைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கப்பட்டு 70 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசன் சரியான ரீச் பெறவில்லை என்பது தான் உண்மை, போட்டியாளர்கள் விளையாட்டிற்கு பதிலாக மோசமான விஷயங்களை தான் செய்து வருகிறார்கள்.

அதிரடியாக சில வாரங்கள் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து டபுள் எவிக்ஷன்கள் நடந்து வருகிறது.

கடந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வியானா மற்றும் ரம்யா ஜோ வெளியேறினார்கள். தற்போது இவர்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக எவ்வளவு சம்பளம் பெற்றார்கள் என்ற விவரம் வலம் வருகிறது.

வியானா கிட்டத்தட்ட 70 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக ரூ. 10 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் ரம்யா ஜோவிற்கு ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு 70 நாட்களுக்கு ரூ. 6 லட்சம் வரை சம்பளம் பெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் பார்க்கப்பட்டவை.

Scroll to Top