ஒவ்வொரு நபர்களின் ஆளுமைப் பண்புகளை அவர்களது உடல் மொழி எனப்படும் பாடி லாங்குவேஜ் எடுத்துக்காட்டுகிறது. உளவியல் நிபுணர்களால் ஒருவர் பேசாமலேயே அவர் என்ன நினைக்கிறார், என்ன செய்யப் போகிறார் என்பதை அவரது தோற்றத்தை பார்த்தே ஓரளவு யூகித்து விட முடியும்.
நம்முடைய ஒவ்வொரு உடல் மொழிக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தங்கள் இருக்கின்றன. சிலர் தங்களுடைய ஆளுமைப் பண்புகளை மறைத்தாலும் அவர்களுடைய உடல் மொழி அதனை வெளிப்படுத்தி விடும். அந்த வகையில் கைகளை முதுகுக்கு பின்னால் கட்டிக் கொள்பவர்களுக்கும் சில ஆளுமைப் பண்புகள் இருக்கின்றன.
ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தும் முன்பாக ஆளுமைப் பண்புகளை உடல் மொழி மூலமாகத் தெரிவிக்கிறார்கள். அது அன்பாக இருந்தாலும், கோபமாக இருந்தாலும், மகிழ்ச்சி அல்லது விரக்தியாக இருந்தாலும், அவற்றை உங்களுடைய உடல் அசைவுகள் ஓரளவு வெளிப்படுத்தி விடும்.
உடலின் எந்தப் பகுதியை விடவும் கைகளுக்கும் மூளைக்கும் இடையிலான தொடர்பு வலுவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அந்த வகையில் கைகளை முதுகுக்கு பின்னால் உள்ளங்கையால் பிடிப்பவர்களுக்கு சில பண்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அத்தகைய நபர்கள் தன்னம்பிக்கை மற்றும் சுதந்திர உணர்வைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களது தோற்றத்தில் சௌகரியமாக இருப்பதை பின்பக்கம் கைகளை கட்டி வெளிப்படுத்துகின்றனர்.
இத்தகையவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை அதிகம் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் ஒரு விஷயத்தைச் செய்யும் முன்பாக சூழ்நிலைகளை ஆய்வு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.




